விடாது துரத்தும் துயரம்; இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிகெட் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.  புதுச்சேரி சோரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாமரைக் கண்ணன். கிரிக்கெட் பயிற்சியாளரான…

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிகெட் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். 

புதுச்சேரி சோரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாமரைக் கண்ணன். கிரிக்கெட் பயிற்சியாளரான இவர், அங்கு பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கிரிக்கெட் கிளப்பில் புகாரளித்துள்ளார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் மாணவியிடம் சமாதானம் பேசி அவரிடம் இருந்து புகார் மனுவை பெறாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் தாமரைக் கண்ணன் மற்றும் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோகித் மற்றும் செயலாளர் வெங்கட் உள்ளிட்ட 5 பேர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதில், ரோகித் என்பவர் இயக்குநர் ஷங்கரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.