காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன்…

கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன் உணவு உண்பதற்காக, கோவை சாய்பாபாகாலனி என் எஸ் ஆர் சாலையிலுள்ள பிரபல உணவகமான அன்னபூர்னா உணவகத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு காலிஃபிளவர் தோசை,பன்னீர் தோசை,இட்லி,புரோட்டா உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது அனைத்து உணவு வகைகளும் வந்த நிலையில், காலிஃபிளவர் தோசையை சாப்பிட முற்பட்டபோது அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து உணவருந்திய பிரசாந்த் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம், இதுகுறித்து கூறவே சாதாரணமாக பதிலளித்த உணவக நிர்வாகத்தினர், அதற்கு பதிலாக வேறு தோசை கொண்டு வருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்காத வாடிக்கையாளர் பிரசாந்த் சமையலறை முழுவதையும் தூய்மை படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு உணவகத்தினர் சம்மதிக்க மறுத்ததையடுத்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறையினரிடம் நாளை புகார் அளிக்க உள்ளதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். தற்போது பிரபல உணவகத்தில் தோசையில் கரப்பான்பூச்சி இருந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.