தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென நடந்த சோக சம்பவம்.. துக்கத்தில் உறைந்த குடும்பம்!

ஓட்டேரியில் தாயுடன் தூங்கிய இரண்டரை வயது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஓட்டேரி குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் அபினாஷ் (30). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என 3 குழந்தைகள் இருந்தனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு உஷா தனது மூன்று குழந்தைகளும் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அபினாஷ் கீழே படுத்துக் கொண்டிருந்தார். நேற்று காலை 5.30 மணியளவில் உஷா எழுந்து பார்த்த போது இரண்டாவது மகனான இரண்டரை வயதாகும் நகுலேஸ்வரன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் இருந்தார்.

இதையும் படியுங்கள் : PBKS vs LSG | லக்னோ அணி பவுலர்களுக்கு தண்ணி காட்டிய பிரப்சிம்ரன் சிங்… பஞ்சாப் அசத்தல் வெற்றி!

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உஷா இதுகுறித்து அபினானிஷம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோததித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் தூக்கத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ஓட்டேரி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.