ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் ஊன்றுதலுடன் தொடங்கியது!

குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் ஊன்றுதல் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பின் சித்திரை திருவிழா கம்பம் ஊன்றுதலுடன் இன்று தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து குளித்தலை நகரப் பகுதிகளின் பல்வேறு இடங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலவண்ண மின் விளக்குகள் ஒளிர, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் சுவாமியுடன் மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.