ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.  சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவன் ரவுடி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவன் ரவுடி சீசிங் ராஜா. இவர் போலீசாரின் நெருக்கடி காரணமாக தனது குடும்பத்தினரை குன்றத்தூரில் தங்க வைத்துள்ளார். கொலை, ஆள்கடத்தல் மிரட்டல் என இவர் மீது சென்னை, சென்னை புறநகர் மற்றும் பல மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகம் பகுதியில் தங்கி
சென்னையில் தனது ஆட்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு
வருகிறார். கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல கூலிப்படை தலைவன் மறைந்த ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான  சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளச்சேரி பகுதியில் பார் ஊழியர் ஆனந்தன் என்பவரை மிரட்டி பணம்
கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.