லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்…

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம்
வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து
வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதிக்கு வரி வசூல் செய்யும்
அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த
ஒருவரது வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்சமாக கேட்ட
20,000 பணத்துடன் தகவல் கொடுத்த நபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து காந்தி கிராமம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லஞ்சப் பணத்தை
வாங்கும் போது டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக பிடிபட்டார்.

இதையும் படிக்கவும்: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்- முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

அவரை கைது செய்த போலீசார், ரவிச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த டீக்கடை
உரிமையாளர் பாலாஜி என்பவரிடமும் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.