உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் ஆலையை டெஸ்லா நிறுவனம் மெக்ஸிகோவில் நிறுவ இருக்கிறது.
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டையே தனது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பால் புரட்டி போட்ட நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மிகப் பெரிய அளவிலான டெஸ்லா ஆலையை நடத்தி வருகிறார். அங்குதான் அதிகமான டெஸ்லா கார்கள் தயாராகி வருகிறது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை தயாரிப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. புதிய தலைமுறை கார்களை தயாரிக்க மெக்ஸிகோவில் தனது புதிய ஆலையை உருவாக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது. .
அண்மைச் செய்தி :”பிள்ளைகளை வைத்து மிரட்டுகிறார்” – முன்னாள் மனைவி குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக்
இந்த ஆலையின் மாதிரி புகைப்படம் ஒன்றையும் டெஸ்லா வெளியிட்டுள்ளது. இதன்படி உலகின் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஆலையாக இது இருக்கும் என தெரியவந்துள்ளது. தற்போது டெக்ஸாஸ் மாகாணத்தில் நிறுவியுள்ள ஆலை 2500 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. தற்போது மெக்ஸிகோவில் 4200 ஏக்கரில் ஆலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.







