குட்டி யானை ஒன்று குட்டிக் கரணம் போட்ட காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
யானை என்றால் பாலருக்கு அலாதி பிரியம். மனிதரைப் போல அதிக ஆண்டுகள் பூமியில் வாழும் உயிரினமான யானைகள் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆண் யானை களிறு என்றும், பெண் யானை ‘பிடி’ என்றும், யானையின் குட்டி ‘கன்று’ என்றும் அழைக்கப்படுகிறது. எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை அவை நமக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காது.
யானைகள் பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும், அதன் செயல்கள் இனிமையாக இருக்கும், அதிலும் குறிப்பாக யானைக்குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும். அதுபோல இங்கு ஒரு குட்டியானை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘இலக்கிய ஆளுமை நெல்லை கண்ணன்!’
இறங்குவதற்கு கற்றுக் கொடுத்த பெரிய யானை
அந்த வீடியோவில் நிறைய யானைகள் கூட்டமாக உள்ளது. அவை ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மேட்டின் மீது இருந்து பள்ளத்தில் இறங்கிச் செல்கின்றன. அதில், ஒரு பெரிய யானை பின்னால் வரும் குட்டி யானைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல் ஒட்டி போட்டு பள்ளத்தில் இறங்கி அழகாக ஆடி அசைந்து செல்கிறது.
குட்டி கரணம் அடித்த குட்டி யானை
ஆனால் பின்னால் வந்த யானை குட்டிக்கோ சரியாக இறங்க தெரியவில்லை. தலையை ஆட்டி ஆட்டி பார்த்த குட்டியானை முட்டி போட்டு இறங்க பார்க்கிறது. ஆனால் அதற்கு சரியாக இறங்கத் தெரியவில்லை. உடனே குட்டிக்கரணம் அடித்தது போல் கீழே உருண்டு விழுந்து பின்னர் எழுந்து நடந்து செல்கிறது. பார்ப்பதற்கு அச்சச்சோ என இருந்தாலும், விழுந்த வேகத்தில் அந்த யானை எழும் இந்த காட்சி பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.








