மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!

திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.  திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…

திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். 

திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர்
மீரான். இவரது மூன்றாவது மகள் மூன்று வயது சிறுமியான ஸபா ஹாதீயா. இவர், மேலப்பாளையம் அம்பிகாபுரம் அங்கன்வாடி மையத்தில் கடந்த பத்து மாதங்களாக பயின்று வருகிறார். தான் படித்து வரும் அந்த அங்கன்வாடி பள்ளியில் கழிப்பறை வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரில் சென்று மனு அளித்தார்.

அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “எங்களுடைய அங்கன்வாடியில் வாரந்தோறும் சத்துணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்டவை முதல்வரின் ஆணைக்கிணங்க சிறப்பாக கொடுத்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் இந்த அங்கன்வாடியில் விளையாட்டு உபகரணங்களோ, விளையாட்டு பொருட்களோ இல்லை. மேலும் கழிப்பிட வசதி முறையாக இல்லை. தாங்கள் பயின்று வரும் அங்கன்வாடி மையம் பழமையாகி விட்டதாகவும் எங்கள் அங்கன்வாடி மையத்திற்கு தனியாக கட்டடம் அமைப்பதோடு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் முறையிட்டிருக்கிறார்.

மேலும் இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தனது கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மழலை மொழியில் சிறுமி ஸபா ஹாதியா கூறிய கோரிக்கையை கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிறைவேற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.