பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே-வைகோ

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று  மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள்…

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று  மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

 

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.