ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை – மீட்புப்பணிகள் தீவிரம்!!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின்…

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகே இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். குழந்தையை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

பெண் குழந்தை 20 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தியை அறிந்த அவர், குழந்தையை பாதுகாப்பாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மீட்புப் படையினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.