தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையை பொருத்தவரை கடந்த ஒரு மாதமாக தினசரி வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக மதிய நேரத்தில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் வெப்பச் சலனம் காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று மாலை கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. .அதேபோல் அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் தூறலுடன் கூடிய சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.