வேலூரில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால் திருட்டு?

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம்…

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் ஆவினில் தினசரி 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பால் உப பொருட்களான நெய், பால் கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் என பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்து.

இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.