விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில்…

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 52வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 9ம் கட்ட பேச்சுவார்த்தை, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று மதியம் தொடங்கியது.

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால், இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல், தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply