உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்தப் போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியில் பங்கேற்பதற்காக காளை உரிமையாளர்கள் நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காயமடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 கால்நடை ஆம்புலன்ஸ்கள் மற்றும் பத்து 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிகமாக வெற்றி பெறும் வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவிருக்கிறது. உலகமே வியக்கத்தக்க அளவிற்கு இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வழி வகுத்து கொடுத்தது அதிமுக அரசுதான் என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.