4 மாவட்டங்களில் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா…

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம் புத்தூர், உக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு நெல், கடலை, உளுந்து, பச்சை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது 19 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், 22 சதவிகித ஈர நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.