முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள்
வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இன்று நாடு
முழுவதும் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில்
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் வரிசையாக
நின்று தேசியக்கொடி ஏந்தி அணிவகுத்த வண்ணம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வனசரகர்கள், வனகாப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்று இணை இயக்குநர் வனத்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளிரியபடி தேசிய கொடிக்கு மரியாதை
செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. இவ்விழாவில்
சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– யாழன்







