முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்!

ஹாங்காங் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்து முறைப்படி மந்திரங்கள் ஓத ஹாங்காங் மணப்பெண்ணான செல்சிக்கு காத்த முத்து தாலி கட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் போருவாய் பகுதி சேர்ந்தவர் காத்த முத்து இவர் பொறியியல் படிப்பு படித்து விட்டு ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு கடந்த இரண்டு வருட காலமாக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த செல்சி என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் இவர்களின் இந்த காதலை இரு குடும்பமும் ஏற்றுக்கொண்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து இரண்டு குடும்பமும் ஒன்றிணைந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது அதன்படி இன்று காத்தமுத்துவிற்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த செல்சி என்பவருக்கும் இந்து முறைப்படி புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த உறவினர்களும், சுற்றத்தாரும் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி சென்றதோடு, புதுக்கோட்டையில் இருந்து ஹாங்காங் நாட்டிற்கு பணி நிமித்தமாக சென்ற காத்தமுத்து ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவத்தையும், ஹாங்காங் நாட்டு முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இளம்பெண் செல்சியையும் கண்டு வியந்து மனதார பாரட்டிச் சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

“நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – முன்னாள் அமைச்சர் தங்கமணி

Web Editor

திருவல்லிக்கேணியில் பரப்புரையை தொடங்கிய குஷ்பு!

Niruban Chakkaaravarthi