முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 740 ஆக தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,24,731 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 765 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,79,895 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,454 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 105 பேருக்கும் கோயம்புத்தூரில் 112 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை – கமல் திட்டவட்டம்

Halley Karthik

கோவையில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

Gayathri Venkatesan

நிதி அமைச்சர் மீது அவதூறு: வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

Ezhilarasan