மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை ஆட்சியரிடம் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் மனு அளித்துள்ளனர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அண்மை யில் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில் குறிப்பிட்டப்படி 3 வாரத்திற்குள் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகிய வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீபா, தீபக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.








