தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி, மீண்டும் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும், மக்கள் மத்தியில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடங்கிய விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுவருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 7,145 ஆக உள்ளது.
கொரோனா தொற்றால் 0 உயிரிழப்பும், 964 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். சென்னையில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 51 பேருக்கும், கோவையில், 89 பேருக்கும், திருச்சியில் 16 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேருக்கும் என ஒட்டுமொத்தமாக இன்று 703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.