‘புத்தகக் கண்காட்சி; பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்’

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு…

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகப் புத்தகத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு இல்லம் தோறும் நூலகம் என்ற முழக்கத்துடன் 18வது ஆண்டாக மக்கள் சிந்தனை பேரவையின் புத்தகத் திருவிழா ஈரோடு சக்தி சாலையில் உள்ள சிக்கிய நாயக்கர் கல்லூரி வளாகத்தில், கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலமாகத் தொடங்கி வைத்தார்.

230 மேற்பட்ட இந்திய உலக அளவில் தமிழ் மற்றும் ஆங்கில படைப்புகள் கொண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘’மதுரை மாநகர் மாவட்ட தலைவராக, புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்குக் கூடுதல் பொறுப்பு’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை’

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்கண்காட்சி இலக்கிய விழாவோடு நடத்தப்படும் எனத் தெரிவித்த அவர், பள்ளியறை பூங்கொத்து மீண்டும் நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும் என முயற்சி செய்து வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு 3 மாதத்திற்கு ஒருமுறை பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் நடமாடும் ஆலோசனை மையம் செயல்படும். 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது கிடையாது. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதித்தேர்வு வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலிப்பார் எனக் கூறினார். மேலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தடுக்காத காரணத்தால் அதிகரித்திருந்தது. தற்போது முதலமைச்சரின் உத்தரவுக்குப்பிறகு காவல்துறையினர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.