சீர்காழி அருகே வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கம்பன் நகரில் வசித்து
வருபவர் சோமசுந்தரம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு
பெற்றவரான இவர் 13ஆம் தேதி சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு
குடும்பத்துடன் சென்றுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனையடுத்து வீடு திரும்பிய சோமசுந்தரம் வீட்டின் உள்புற கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து சீர்காழி காவல் நிலையத்தில் சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் கைரேகை நிபுணர் உதவியுடன் சோதனை மேற்கொண்டு கொள்ளையடித்த மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







