முக்கியச் செய்திகள் உலகம்

காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தானியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், முந்தைய தலிபான் ஆட்சியின்போது பட்ட துன்பங்களை கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானியர்கள், எப்படியாவது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் நோக்கத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்குள்ள வெளிநாட்டினரும் தங்கள் தாய்நாட்டுக்கு செல்லத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, காபூல் விமான நிலையம் பரபரப்பாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கானவர் கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளதால் அங்கு அசாதாரணச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித் துள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Halley karthi

கொரோனா பரவலால் திருப்பதியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Ezhilarasan

போலீசார் தொல்லையால் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

Niruban Chakkaaravarthi