எழில் இயக்கத்தில் பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியவர் எழில்.
இவர் இப்போது இயக்கி வரும் படத்தில் பார்த்திபன், கவுதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
https://twitter.com/VijaySethuOffl/status/1429422514271244288
அதன்படி, இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்ட்ர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். படத்திற்கு ’யுத்த சத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








