முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை முதல் அலையை விட அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு இது கடும் சவாலான பணியாக இருக்கிறது.

உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களும் இந்த தொற்று பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்தபடி இருக்கிறது. கொரோனா முதலாவது அலை பரவலின் போது நாடு முழுவதும் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் 2 வது அலையில் நாடு முழுவதும் இதுவரை 646 டாக்டர்கள் தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதில் டெல்லியில் அதிகப்பட்சமாக 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 97 மருத்துவர்களும் உத்தரபிரதேசத்தில் 79, ராஜஸ்தானில் 43, ஜார்கண்ட்டில் 39, குஜராத்தில் 37, ஆந்திரா, தெலங்கானாவில் தலா, 35, 34 மற்றும் மேற்கு வங்கத்தில் 30 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தில் கதநாயகனாக நடிக்கும் பிரேம்ஜி!

Vandhana

ரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்!

Jayapriya

”ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya