போலியான செய்தியை பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்!

தேசத்திற்கு எதிரான செய்திகளையும், போலிச்செய்திகளையும் பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்களை முடக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய இணையமச்சர் எல் முருகன்…

தேசத்திற்கு எதிரான செய்திகளையும், போலிச்செய்திகளையும் பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்களை முடக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய இணையமச்சர் எல் முருகன் பேசியதாவது, கருத்து சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் இறையான்மையை, அமைதியை குளைக்கும் வகையில் தேசத்திற்கு எதிரான போலிச் செய்திகளை பரப்பிய பல்வேறு சமூக வலைதளப்பக்கங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பத்திரிகைகளில் வரும் போலிச் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை கண்காணிக்க பிரெஸ் கௌன்சில் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களுக்கு என பல்வேறு நெறிமுறைகள் உள்ளது. இந்த நெறிமுறைகளை அவர்கள் மீறும் பட்சத்தில் பிரஸ் கவுன்சில் சட்டம் 14ன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் கிடைக்கப்பெற்ற 150 க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 60க்கும் மேற்பட்ட சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பக்கங்களுக்கு பின்புலமாக பாகிஸ்தான் இருந்துவந்ததும் தெரியவந்துள்ளது” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து டெக் ஃபாக் செயலியின் மீதான புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், போலி செய்திகளையும், அவற்றை பரப்பும் கணக்குகளையும் கண்காணிக்க குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை தடுக்க அவர்கள் வேலை செய்துவருகின்றனர் என்று பதிலளித்தார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அறிக்கையின் படி ஜனவரி 21ம் தேதி போலி செய்திகளை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள், 2 டிவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் ஒரு பேஸ்புக் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதமும் 20 யூடியூப் சேனல்கள் உட்பட 2 வெப் சைட்டுகளையும் முடக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், போலி செய்திகளை பரப்பும் சமூக வலைதள பக்கங்களின் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.