முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள்…

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 மதுக்கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என்று சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் எடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் கண்டறிந்திருப்பதாகத் தெரிகிறது, இதையடுத்து 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் ஜூன் 3 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.