ஃபேஸ்புக் கணக்கில் இருந்து தானாக ’ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்’ சென்றதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்மையில் சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்கிலிருந்து தானாக ’ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்’ செல்வதாகப் புகார் கூறினர். வங்க தேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பயனர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொழில்நுட்ப கோளாறானது பல பயனர்களுக்கு அவர்களின் தனியுரிமை ஆக்கிரமிக்கப்பட்டதாக உணர வழிவகுத்தது. மெட்டா நிறுவனம் இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்தும், பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Fb is legit adding randoms if you click on their profile.
Got a screen record here.@facebook wtf?!#Facebook #glitch #facebookadd pic.twitter.com/S7lxPhQU6F
— Bavid Mcjavid (@bavidmcjavid) May 12, 2023
“சமீபத்திய ஆப்ஸ் அப்டேட் தொடர்பான பிழையை நாங்கள் சரி செய்துள்ளோம், இதனால் சில ஃபேஸ்புக் நண்பர் கோரிக்கைகள் தவறாக அனுப்பப்பட்டன. இது நடப்பதை நாங்கள் நிறுத்திவிட்டோம், இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், ”என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறினார்.