விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அவர், 20 கோடியே 92 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், உரத்தட்டுபாட்டிற்கு காரணம், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு உரங்களை தாமதமாக வழங்கி வருவதே எனக்கூறினார்.
விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என உறுதி கூறிய அவர், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் விரைந்து மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.







