கோயில் வாசலில் பிச்சை எடுக்கும், அரசுத்துறையில் பணியாற்றிய பெண்

மனநிலை பாதித்த மகளை காப்பாற்றுவதற்காக, காரைக்கால் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வரும் பெண், அரசுத்துறையில் பணியாற்றியவர் என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். காரைக்கால் பத்திரகாளி அம்மன் கோயில் வாசலில் பிச்சையெடுக்கும்…

மனநிலை பாதித்த மகளை காப்பாற்றுவதற்காக, காரைக்கால் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வரும் பெண், அரசுத்துறையில் பணியாற்றியவர் என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

காரைக்கால் பத்திரகாளி அம்மன் கோயில் வாசலில் பிச்சையெடுக்கும் ஜெயராணி என்ற பெண், மனநிலை பாதித்த 25 வயது மகளை காப்பாற்ற பெரும் சிரமப்பட்டு வருகிறார். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் வேளாண்துறையில் பணியாற்றிய அவர், சாலை விபத்தில் சிக்கியதால் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவரது மகள் பள்ளி மேல்நிலை படிப்பின் போது, அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது கணவரும் பிரிந்து சென்று விட்டதால் குடும்பம் நடத்த முடியாமல் கோயிலில் தங்கி பிச்சை எடுத்து வருவதாக ஜெயராணி வேதனை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.