அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!

திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…

திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (35). இவர் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக ஆலங்காடு கிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தவர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றபோது ஆலங்காடு டாஸ்மாக் கடை அருகே மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல், ராஜேஷை விரட்டி சரமாரியாக வெட்டி அவரது தலையை துண்டித்தது. அதையடுத்து அவரது உடலை அப்பகுதியிலேயே போட்டுவிட்டு முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் தலையை வீசிவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டு கொலையாளிகள் தப்பி செல்லும் சிசிடிவி காட்சியை கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கோவிலூரைச் சேர்ந்த ஜெகன், அஜித், அருண்குமார், செந்தில் ராஜா, யோகேஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து கொல்லப்பட்ட ராஜேஷின் துப்பாக்கி மற்றும் கொலையாளிகளிடமிருந்து அறிவாள்கள், கார், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.