4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்.…

பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன். இவர் மகன் கார்த்திக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாபுராஜ்
என்பவரிடம் பணிபுரிந்தார். அப்போது அவரிடம் இருந்த  சீட்டு பணம் ரூபாய் 4 கோடி 75 லட்சம் ரூபாயினை கொள்ளை அடித்து தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் விசாரணையில் நடைபெற்று  வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக  அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து இன்று  நீதிமன்றத்தில் கார்த்திக் ஆஜரானார். இதனால் 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிபதி பிடிவாரண்ட் வழங்கினர். இதன் அடிப்படையில் கார்த்திக் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.