முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – முன்னாள் அமைச்சர் தங்கமணி

நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். ஊழல் செய்துள்ளதாக செய்தி துளியும் உண்மையில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 3-ம் தேதி சில நாளிதழ், மற்றும் தொலைக்காட்சிகளில்  தங்கமணி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து விளக்கம் அளிக்கவே செய்தியாளர்களை சந்தித்துள்ளேன். இது தொடர்பாக கடந்த 2019 ம் ஆண்டு முழு விளக்கங்களை தெரிவித்துள்ளேன்.

2000ம் ஆண்டில் திமுக ஆட்சியில்தான் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நிலக்கரி கொண்டு வர டெண்டர் விடப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நீதிமன்றத்திற்கு சென்று தடையானை பெற்று 2019 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டன. 2016 ம் ஆண்டு நான் மின்சாரத்துறை அமைச்சராக ஆன பிறகு நீதிமன்றம் சென்று விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வரும்  டெண்டரை கேன்சல் செய்தோம். நான் ரூ.908 கோடி ஊழல் செய்து விட்டதாக தவறாக செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே நான் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளேன்.

கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு செய்யப்பட்டது 2001 – 2019 வரை என போடப்பட்டுள்ளது. அவர்கள் தெரிந்து போட்டார்களா ? அல்லது தெரியாமல் போட்டார்களா ? இது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என தெரியாது. ஏனென்றால் 2006 – 2011 வரை திமுக ஆட்சி. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருந்தார். திமுக ஆட்சி இருந்ததை மறந்து விட்டு ஊழல் என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா அல்லது முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என தனக்கு தெரியவில்லை.

அண்மைச் செய்தி : அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

2011 – 2016  ஆம் ஆண்டு என்று தன் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்., அதில் துளியும் உண்மையில்லை என்பதை மீண்டும் மறுப்பு தெரிவிக்கின்றேன். பொய் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். நீதிமன்றம் சென்று போராடுவேன். இவ்வாறு தங்கமணி தெரிவித்தார்.

அதிமுக பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்த அவர் என் மீதான பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு. அது தொடர்பான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறியதுடன் பேட்டியை முடித்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!

EZHILARASAN D

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு

EZHILARASAN D

‘2047ல் நாட்டின் பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும்’ – முகேஷ் அம்பானி

EZHILARASAN D