கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் விற்பனை பரவி வருகிறது.

இதனை முழுமையாக தடுத்து நிறுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசாரால் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்த கல்லூரி மாணவர்களை கோட்டார் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து 527 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில், கஞ்சா விற்பனை செய்த பூதபாண்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ், பிரதீப், பால் குளத்தை சேர்ந்த அனு (18), அபினேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.