திமுக தலைமைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுபவர்கள் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி கண்டன உரையாற்றுகிறார்!” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




