சென்னை மதுரவாயிலில் பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பறக்க விடுவதற்காக வைத்திருந்த 370 கருப்பு பலூன்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மதுரவாயல் நூம்பல் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் வீட்டில் “கோ பேக்“ மோடி என அச்சிடப்பட்ட பலூன்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் போலீசார் அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று அங்கு இருந்த 370 பலூன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராத வகையில் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
—ரூபி







