காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை மத்திய அரசு நீக்கியது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவித்தன.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : உயர்கல்வியில் எல்லா துறைகளும் நல்ல துறை தான் – பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், ”காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை மத்திய அரசு நீக்கியது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஏனென்றால் அதிமுக ஆட்சி காலத்தில் காவேரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு இந்த மூன்று பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் கொடுத்த அழுத்தம். எங்களுடைய அழுத்தம் கூடுதலாகவே இருந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு தான் இதற்கு காரணம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்தார்.