சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் குடியரசு தலைவர்…

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் குடியரசு தலைவர் சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் இன்று பறந்தார்.,

அதன்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து விமானத்தில் பறப்பதற்காக ஆயத்தமானார். தொடர்ந்து, பிரம்மபுத்திரா மற்றும் தேஜ்பூர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் சுகோய்-30 எம்.கே.ஜே. ரக போர் விமானத்தில் பறந்தார். இமயமலை காட்சியுடன் விமானப்படை நிலையத்திற்குத் திரும்புவதற்கு முன், ராஷ்டிரபதி பவன் ட்வீட் செய்தது.

இந்த சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் இரண்டு பேர் அமர கூடிய போர் விமானம் ஆகும். ரஷியாவை சேர்ந்த சுகோய் விமானம், இந்தியாவின் உரிமம் பெற்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு, அப்போது குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.