கர்நாடகவால் கட்டாய மதமாற்றம் செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இலவச கல்வி கொடுக்கிறோம், வேலைவாங்கி தருகிறோம் என ஆசைவார்த்தைகளை கூறி மதமாற்றம் நடைபெற்று வருவதாக அம்மாநிலத்தில் உள்ள வலதுசாரிகள் அமைப்புகள் புகார் கூறி வந்தன. இந்தநிலையில், அம்மாநிலத்தை ஆளும் பாஜக, கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றியது.
அந்த மசோதா மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கமே சிறுபான்மையினரை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சட்டங்களை மதமாற்றங்களை தடுக்க வலுவானதாக இருக்கும் பட்சத்தில், மத மாற்ற தடை சட்டம் மூலம் மக்களை பிளவுப்படுத்தி குளிர் காய பாஜக அரசு முயலுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.







