ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்பதில், இந்து சமய அறநிலையத்துறை முனைப்பு காட்டி வருகிறது.
https://twitter.com/mkstalin/status/1526599427061796865?s=21&t=w1vT7mE_HBejYV3p08f7yg
இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகள் விவரம் அடங்கிய புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அண்மைச் செய்தி: “கல்குவாரி விபத்து; மீட்பு பணியில் பின்னடைவு!”
https://twitter.com/PKSekarbabu/status/1526573935684628480
அதனைத்தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த முதலமைச்சர், “ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம் என்றும், அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம்” தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







