ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!

ஆவடி அடுத்த  இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம்…

3 drug-addicted youths arrested for brutally attacking passengers!

ஆவடி அடுத்த  இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு போதையில் வந்த 4-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நடைமேடையில் இருந்த இரும்பு ராடு, பழுப்பு, டியூப் லைட் உள்ளிட்டவற்றை பிடிங்கி பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என கண்ணில் பட்டவர்களையெலாம் சராமாரியாக தாக்கினர்.

இதில் இரும்பு கம்பியால் முதியவர் பரமசிவத்தை தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.