2-வது டெஸ்ட் – இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.  இரு அணிகளுக்கு…

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து மோதும்,  இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை
விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ – வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  முழங்கால் காயம் காரணமாக ஜாக் லீச் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சோயிப் பஷீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மார்க் வுட்டுக்குப் பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி ;

ஸாக் கிராலி,  பென் டக்கெட்,  ஆலி போப்,  ஜோ ரூட்,  ஜானி பேர்ஸ்டோ,  பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ்,  ரீஹன் அகமது,  டாம் ஹார்ட்லி,  சோயிப் பஷீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.