கணவரைப் பிரிந்து விட்டேன்… நடிகர் ராஜ்கிரண் மகள் வெளியிட்ட வீடியோ!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.    நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா.  இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான முனிஷ்…

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா.  இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான முனிஷ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இத்திருமணத்துக்கு ராஜ்கிரண் குடும்பத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணத்துக்குப் பிறகு நிறைய நேர்காணல்களில் கலந்து கொண்டவர்கள்,  தங்கள் காதல் மற்றும் உறுதியான முடிவைப் பற்றியும் பேசி வந்தனர்.  முனீஸ் ராஜா நாதஸ்வரம்,  முள்ளும் மலரும் போன்ற தொடர்களில் நடித்ததுடன்தொடர்ந்து, சில படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்,  பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  IRCTC போல் போலி இணையதளங்கள் உருவாக்கி நூதன மோசடி – போலீசார் தீவிர விசாரணை!

அதில்,  அவர் கூறியதாவது:

“நானும் முனீஸ் ராஜாவும் 2022-ல் திருமணம் செய்துகொண்டது ஊடக வாயிலாக தெரிய வந்திருக்கும்.  இப்போது,  சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.  எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.  இந்தத் திருமணத்துக்குப் பின் என்னை வளர்த்த தந்தையை அதிகமாகக்  காயப்படுத்தியிருக்கிறேன்.  ஆனால்,  எனக்கு ஒரு பிரச்னை என வந்தபோது என்னைக் கைவிடாமல் காப்பாற்றினார்கள்.  எத்தனை முறை என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டாலும் போதாது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.