குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று சந்தித்தார்.  இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று சந்தித்தார். 

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பாடியில் உள்ள பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்றார். உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்றதற்காக பிரக்ஞானந்தாவை பாராட்டிய சோம்நாத், சந்திரயான் மினியேச்சர் மாடலை அவருக்கு பரிசாக வழங்கினார்.

 

பின்னர் தலைமை செயலகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“முதலமைச்சரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சந்திராயன் 3 மாதிரியை முதலமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கினேன்.  குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் 2 ஆண்டுகளில் அமைப்பதில் முதலமைச்சரின் ஆதரவு வழங்க கேட்டுக்கொண்டுள்ளேன். இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதியளித்தார்.  

ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 17 தங்கப்பதக்கங்கள் வாங்கியதற்கு வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.