மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!

மும்பையிலிருந்து 2,750 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 2 பேர் உட்பட 6 பேரை அரக்கோணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணிக்கம் மற்றும் கரண் ஆகியோர் மும்பை சென்று…

மும்பையிலிருந்து 2,750 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 2 பேர் உட்பட 6 பேரை அரக்கோணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணிக்கம் மற்றும் கரண் ஆகியோர் மும்பை சென்று போதை தரும் தைடால் மற்றும் நைட்ரோவிட் மாத்திரைகளை வாங்கி வருவதாக  கோயம்பேடு போலிசாருக்கு தகவல்  கிடைத்தது. இந்நிலையில், கோயம்பேடு காவல்துறையினர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தீவிரமாக சோதனை நடத்தினர்.

இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் மாணிக்கம் மற்றும் கரண் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2750 மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் போதை மாத்திரைகளை வாங்கி வருமாறு பணம் அனுப்பிய ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஹரிஷ்(25), விஜய குமார் (எ) கிளிஞ்சவாய் விஜி(22), அஜய் (எ) வெள்ளை அஜய்(22) மற்றும் கோகுல்(22) ஆகியோர் என தெரிய வந்தது.

இதையும் படியுங்கள் : “நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” – சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!

இதையடுத்து ஹரிஷ், விஜய குமார் , அஜய் மற்றும் கோகுல் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.