ஒரே நாளில் 23 ஏவுகணை சோதனை – அதிரடி காட்டிய வடகொரியா

வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டதால் தென் கொரிய எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.   அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு…

வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டதால் தென் கொரிய எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.

 

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களது நாட்டை ஆக்கிரமிப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பயிற்சி மேற்கொள்வதாக வடகொரியா ஆத்திரத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அனு ஆயுத தாக்குதல் நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 23 ஏவுகணைகளை வடகொரியா வீசி சோதனை நிகழ்த்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் சரமாரியாக 23 ஏவுகணைகளை வடகொரியா வீசி சோதனையில் ஈடுபட்டதால், தென்கொரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் குண்டுகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இதனால் இருநாட்டு எல்லைகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.