முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீலகிரி: வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்ற புலி – வீடியோ வைரல்

நீலகிரி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு கால்நடையை புலி ஒன்று வேட்டையாடி தின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள எச்.பி.எப் பகுதியில் அவ்வப்போது புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை புலி ஒன்று அங்கு வந்து சென்ற வீடியோவை அங்குள்ளவர்கள் வெளியிட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எச்.பி.எப் பகுதிக்குள் நுழைந்த அந்த புலி மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு கால்நடையை வேட்டையாடி கொன்றது. பின்னர், அதனை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று கடித்து தின்றதை அங்குள்ள சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. குடியிருப்புகளின் அருகே உலா வரும் புலியை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடர் மழை: வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

Halley Karthik

நட்சத்திரம் நகர்கிறது ஒரு அரசியல் படம்- பா.ரஞ்சித்

G SaravanaKumar

அடுத்த விக்டிம் யார் ?

Vel Prasanth