சஸ்பென்ஸ் முடிந்தது; தென்காசி மாவட்ட திமுக செயலாளர் இவர்தான்

திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக ஈ ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மட்டும்…

திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக ஈ ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மட்டும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு திமுக பொதுக்குழு அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தலைவராக மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன், புதிய துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி பொறுப்பேற்றார்.

இதனிடையே தென்காசி வடக்குக்கு மட்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு யாருக்கு என அறிவிக்கப்படவில்லை. தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செல்லத்துரை இருந்த நிலையில், தனுஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

தொடர்ந்து தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களுட்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக ராஜா தேர்வானதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்டத்தின் செயலாளராக சிவ பத்மநாதன் தேர்வாகியுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பளு தூக்கும் வீரரான ராஜா, தற்போது சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.