2026 தேர்தல் : விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

பாமக சார்பில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக்கடியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்பமனுவை பெறுவதற்கான தேதியை 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அன்புமணி தரப்பு பாமக சார்பிலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.